Home /News /coronavirus-latest-news /

40 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை: அதிக உயிர்களை பறித்த கொடிய நோய் எது தெரியுமா?

40 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை: அதிக உயிர்களை பறித்த கொடிய நோய் எது தெரியுமா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

கறுப்புச் சாவு என்பது 1347 தொடக்கம் 1351 வரை ஐரோப்பாவில் பரவிய ஒரு கொள்ளைத்தொற்று நோய். மனித வரலாற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நோயில் முதலிடம் இந்த நோய்க்கே தரலாம்

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் முதன்முறையாக கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  சர்வதேச அளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது  40 லட்சத்தை  கடந்துள்ளது.  அமெரிக்காவில் 6 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 4 லட்சத்துக்கு மேற்பட்டோரும் பிரேசில் நாட்டில் 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மக்களை அதிகம் பலி வாங்கிய நோய்கள் என்ன என்பதை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரியம்மை:

மனித குல வரலாற்றில் மிகப் மோசமான பாதிப்பை உண்டாகிய நோய் என்றால் அது பெரியம்மைதான். இது வரியோலா மேசர் (Variola major) மற்றும் வரியோலா மைனர் (Variola minor) ஆகிய இரு  அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. காற்று வழியாக பரவக்கூடிய இந்த நோய் பல்வேறு காலகட்டங்களில் பேரழிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  பெரியம்மை நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை  30 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

மேலும் படிக்க: ஆகஸ்டு 15 க்குள் அனைவருக்கும்  தடுப்பூசி: தமிழிசை நம்பிக்கை!


கருப்பு நோய்:

கறுப்புச் சாவு என்பது 1347 தொடக்கம் 1351 வரை ஐரோப்பாவில் பரவிய ஒரு கொள்ளைத்தொற்று நோய். மனித வரலாற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நோயில் முதலிடம் இந்த நோய்க்கே தரலாம். காரணம், வெறும் நான்கு ஆண்டுகளில் இந்த நோயின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 50 லட்சம் ஆகும்.  இந்த நோயும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஸ்பெனிஷ் ஃப்ளூ

இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல் எனப்படும் ஸ்பெனிஷ் ஃப்ளூ, கடந்த 1918ம் ஆண்டு பரவிய உலகையே அச்சம் அடைய செய்தது.  ஹெச்1என்1 இன்ஃபுளுவென்சா வைரஸ் மூலம் பரவும் இந்த நோயால், 1918-1919 இடைப்பட்ட காலகட்டத்தில் 5 கோடி பேர் உயிரிழந்தனர். 50 கோடி மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள்...


ஹெச்.ஐ.வி./ எய்ட்ஸ்

மனிதர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைய செய்து பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோய் பாதுகாப்பற்ற உடலுறவு, ஒருவருக்கு செலுத்தப்பட்ட ஊசியை மற்றவருக்கு செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் பரவக்கூடியது. இன்றைய காலக்கட்டத்திலும் மோசமான நோயாக அறியக்க் கூடிய எய்ட்ஸ் நோயால் 1981 முதல் 2020 வரை 2.36 கோடியில் இருந்து 4.36 கோடி மக்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோல், காலராவால் 15 லட்சம் பேரும்,  ஆசிய ஃப்ளூவால்  11 லட்சம் பேரும்  ரஷ்யன் ஃப்ளூவால்  10 லட்சம் பேரும்  ஹாங்காங் ஃப்ளூவால் 10 லட்சம் பேரும் உயிர் இழந்துள்ளனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Corona

அடுத்த செய்தி