உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியது!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியது!
கோப்புப்படம்
  • Share this:
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், உயிரிழப்பு 16,500 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 601 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் இதுவரை 3, 277 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையி்ல், அதைக்காட்டிலும் இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் நேற்று 539 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 2,311 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை ஈரானில் 1,812 பேரும், ஃபிரான்ஸில் 860 பேரும் பலியாகி உள்ளனர்.


அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 10, 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,721 ஆக அதிகரித்துள்ளது. பெலிஸ் நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கேம்பியாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
Also see... 



இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்