• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உலகளவில் ஒரே நாளில் சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று...!

உலகளவில் ஒரே நாளில் சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று...!

கோப்புப்படம் (Reuters)

கோப்புப்படம் (Reuters)

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து 17 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளனர்.

  • Share this:
    உலகம் முழுவதும் கொரானா தொற்றால் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    அமெரிக்காவில் ஒரே நாளில் 26 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 14 லட்சத்து 56 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அங்கு இறப்பு எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஸ்பெயினில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் பிரிட்டன், இத்தாலியில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

    பிரேசிலில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. அங்கு கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு நாளில் உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து 17 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளனர்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: