• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,000-ஐ நெருங்கியது!

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,000-ஐ நெருங்கியது!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 5 நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ள சீனா 6-வது இடத்திற்குச் சென்றுள்ளது.

  • Share this:
     உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்துள்ள நிலையில் 64 ஆயிரத்து 667 பேர் உயிரிழந்துள்ளனர். 

    கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. இங்கு பிப்ரவரி 15-ல் முதன்முதலாக 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11,357 ஆக உள்ளது.

    கடந்த 5 நாட்களில் மட்டும் இங்கு 1 லட்சத்து 22 ,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி ஸ்பெயின் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

    கொரோனாவின் பிறப்பிடமாக பார்க்கப்படும் சீனாவில் பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 5 நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ள சீனா 6-வது இடத்திற்குச் சென்றுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81, 669-ஆகவும், உயிரிழப்பு3,329-ஆகவும் உள்ளது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: