• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உலக அளவில் 31 லட்சத்தை கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

உலக அளவில் 31 லட்சத்தை கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

  • Share this:
    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்துள்ளது.

    உலக அளவில் கொரோனாவால் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒன்பதரை லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் 10 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்த நிலையில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

    ஸ்பெயினில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 822-ஆக உள்ளது. இத்தாலியில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

    பிரான்சில் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 48 ஆயிரத்து 886 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 586 பேர் உயிரிழந்தனர்.

    ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ரஷ்யாவில் 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 867 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: