கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000 தாண்டியது!

சீனாவில் மக்கள் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000 தாண்டியது!
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் அளவு 5 லட்சத்து 32,000 ஆக உள்ளது. இதில் 1 லட்சத்து 23,000 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2,783 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இத்தாலியில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்து வந்த நிலையில், நேற்று ஸ்பெயின் இத்தாலியை மிஞ்சியது.

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் 718 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 4,365 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 57,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 17,941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் 266 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85, 268-ஆகவும், உயிரிழப்பு 935 ஆகவும் அதிகரித்துள்ளது.

இத்தாலியில் 712 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 8, 215 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 80,589 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரானில் 29 ,406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2, 234 ஆக அதிகரித்துள்ளதுஃபிரான்ஸில் 29 ,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1, 696 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 365 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.

சீனாவின் ஊஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 81, 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3, 287 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மக்கள் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

Also see...

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading