உலகளவில் கொரோனா பாதிப்பு: 9,35,187, உயிரிழப்பு: 47,192

சீனாவில் 7 பேர் உயிரிழந்ததால் 3,132 ஆக எண்ணிக்கை உயர்2ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கொரோனா பாதிப்பு: 9,35,187, உயிரிழப்பு: 47,192
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா பெருந்தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

உலக அளவில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 47 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று 26 ஆயிரத்து 473 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் நிகழ்ந்த அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.


அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஸ்பெயினில் 8,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மட்டும் 923 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 727 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 563 பேரும், ஃபிரான்ஸில் 509 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.கொரோனா முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் நேற்று 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 7 பேர் உயிரிழந்த நிலையில் 3 ஆயிரத்து 312 ஆக இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ஜெர்மனியில் இறப்பு எண்ணிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 6, ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளது.

Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading