உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75,000-ஐ நெருங்கியது!

கோப்புப்படம் (Reuters)

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்த நிலையில் உயிரிழப்பு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்த நிலையில் உயிரிழப்பு 75 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

  உலக அளவில் 208 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 3 லட்சத்து 67,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் 1,255 பேர் உட்பட 10,871 பேர் உயிரிழந்துள்ளனர்.

  குறிப்பாக நியூயார்க் நகரில் மட்டும் 599 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். ஸ்பெய்னில் உயிரிழப்பு 13,000 கடந்த நிலையில் இத்தாலியில் உயிரிழப்பு 16,000 தாண்டியுள்ளது. ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்த நிலையில் உயிரிழப்பு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

  பிரான்சில் ஒரே வாரத்தில் 45,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பும் 9,000 நெருங்கி வருகிறது. சீனாவில் நேற்று புதிதாக 32 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் புதிதாக உயிரிழப்பு ஒன்றும் இல்லை. ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,000-உம்  பிரிட்டனில் கொரோனா பாதிப்பு 51,000-உம் தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் உள்ளது.

  Also see..  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: