உலகளவில் கொரோனாவில் உயிரழந்தோர் எண்ணிக்கை 6,500-ஆக அதிகரிப்பு!

உலகளவில் கொரோனாவில் உயிரழந்தோர் எண்ணிக்கை 6,500-ஆக அதிகரிப்பு!
மாதிரிப்படம்
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,500 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்பெயினையும் கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது.

 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், 192 நாடுகளில் பரவியுள்ளது.  உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் 80 ஆயிரத்து 860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை ஆறாயிரத்து 516 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 368 பேர் உயிரிழந்த நாளில், அந்நாட்டில் உயிரிழப்பு ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.


அந்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மைதான வடிவமைப்பாளர் விட்டோரியே கிரிகோட்டி கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தார். 1992 பார்சிலோனா ஒலிம்பிக் மைதானத்தையும், 1990- ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்டங்களுக்கான மைதானங்களையும் கிரிகோட்டி வடிவமைத்திருந்தார்.

ஸ்பெயினில் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்ததை அடுத்து, 288 பேர் இதுவரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இதுவரை 120 பேரும், பிரிட்டனில் 35 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து ஐரோப்பிய கண்டத்தில் ஒரே நாளில் சுமார் 500 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மூவாயிரத்து 244 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 69 பேர் உயிரிழந்தனர். தென்கொரியாவில் எட்டாயிரத்து 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 75 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 100 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சத்தால் ஒரு இடத்தில் 5 பேருக்கு மேல் கூட ஆஸ்திரியா தடை விதித்துள்ளது. ஸ்பெயினில் டிரோன்களை பயன்படுத்தி மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நியூயார்க்கில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, உணவு மற்றும் மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. 50 கோடி மாணவர்கள் உலகம் முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாத நிலை கொரோனாவால் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.Also see:

First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading