உலக அளவில் 15,000-ஐ நெருங்கியது கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு..!

இத்தாலியில் 5,476 உயிரைப் பறித்திருக்கிறது கொரோனா.

உலக அளவில் 15,000-ஐ நெருங்கியது கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு..!
மாதிரிப்படம்
  • Share this:
உலகம் முழுவதும் 192 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்ததை அடுத்து உலக அளவில் இறப்பு எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இத்தாலியில் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போது வரை 3, 261 பேர் உயிரிழந்துள்ள சீனாவை பின்னுக்குத் தள்ளி 5,476 பேரை இத்தாலி இழந்துள்ளது.

ஸ்பெயினிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு மொத்த இறப்பு எண்ணிக்கை 1,756 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் நேற்று 129 பேரும், அமெரிக்காவில் 117 பேரும், ஃபிரான்ஸில் 112 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.


டொமினிக்கா, சிரியா, மொஸாம்பிக் நாடுகளில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செக் குடியரசு, ஆஃப்கானிஸ்தான், மாசிடோனியா நாடுகளில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Also see...

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்