Home /News /coronavirus-latest-news /

உலக அளவில் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

உலக அளவில் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

உலகம் முழுவதும் 14.9 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

    உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், நோய் பாதிப்பால் 2 லட்சத்து 83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு 80 ஆயிரத்து 787 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவை தொடர்ந்து ஸ்பெயினில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    பிரிட்டன் மற்றும் இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது. ரஷ்யாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் உயிரிழப்பு 31 ஆயிரத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி