ஜீரோ உயிரிழப்பு எண்ணிக்கை காட்டியது சீனா... உலகளவில் கொரோனா பாதிப்பு : ஒரு பார்வை!

கொரேனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்ற உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜீரோ உயிரிழப்பு எண்ணிக்கை காட்டியது சீனா... உலகளவில் கொரோனா பாதிப்பு : ஒரு பார்வை!
கோப்புப் படம்
  • Share this:
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சீனாவில் கடந்த ஒருவாரத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

10 நாளில் சீனாவில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை

கொரோனா பாதிப்பின் மையமாக திகழ்ந்த சீனா ஏறக்குறைய பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்டுள்ளது. கடந்த 10 நாட்களில் கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே தொடரும் நிலையில், இந்த 10 நாளில் சீனாவில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.


நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 422 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கொரோனாவால் சுமார் 52 ஆயிரம் பேர் உயிரிந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனா பாதிப்பின் மையமாக விளங்கிய நியூயார்க்கில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இது, கடந்த ஒரு மாதத்தில் அங்கு ஒரே நாளில் ஏற்பட்ட மிக குறைவான உயிரிழப்பாகும்.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பாதிப்பு உயர்ந்துள்ளதுஅமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்துள்ள ஸ்பெயினில் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் திடீரென உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ஸ்பெயினில் 6 ஆயிரத்து 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. ஸ்பெயினில் இதுவரை 22 ஆயிரத்து 524 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது

இத்தாலியில் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்நாட்டில் 1லட்சத்து 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் உயிரிழப்புகள் அதிகமாகியது

பிரிட்டனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்து. 1 லட்சத்து 43ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில், இரண்டுவாரம் கழித்தே இறப்பு விகிதம் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா கண்டம்

ஆப்பிரிக்க கண்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 42 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு வெண்டிலேட்டர் கூட இல்லாததை சுட்டுக்காட்டியுள்ள ஆப்ரிக்க நோய்தடுப்பு மையம், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்வதில்தான் ஆப்பிக்காவின் எதிர்காலமே அடங்கியிருப்பதாக கூறியுள்ளது.

ஆப்பிரிக்காவில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கோ, சோமாலியா நாடுகளின் முன்னாள் அதிபர்கள் உட்பட 1300 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.

ஆனால் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கொமோரோஸ் மற்றும் லெசோதோ நாடுகளில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பு

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்ற உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே, குணமடைந்தவர்களும் சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading