உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்துள்ளது. இதில் 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் 10 லட்சத்து 80 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 11 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 897 பேர் உயிரிழந்ததால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இத்தாலியில் 2 லட்சம் பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 739 பேர் மரணமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 510-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பிரான்சிலும் உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழப்பு ஆயிரத்து 169 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரமாகவும் உள்ளது.
பெல்ஜியத்தில் 49 ஆயிரம் பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.