உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆயிரத்தை கடந்தது
கோப்புப்படம்
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது .

கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 1100 பேர் உயிரிழந்ததை அடுத்து, அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7403 ஆக உயர்ந்துள்ளது. அதில் சுமார் மூவாயிரம் பேர் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அமெரிக்காவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இத்தாலியை மூன்றாமிடத்துக்கு தள்ளி, ஸ்பெயின் இரண்டாமிடத்துக்கு சென்றுள்ளது. இதுவரை ஸ்பெயினில் ஒன்றே கால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 744 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் பாதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரமாகவும், உயிரிழப்பு 14681 ஆகவும் உள்ளது.


ஜெர்மனியில் 91159 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1275 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 82 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் பாதிப்பு அதிகரித்துள்ளதால், சீனா அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேறி, 6வது இடத்துக்கு சென்றுள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading