உலகளவில் கொரோனா பாதிப்பு : 4,22,566 - உயிரிழப்பு: 18,887

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 2991 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு : 4,22,566 - உயிரிழப்பு: 18,887
மாதிரிப் படம்
  • Share this:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஊஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3281 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் கடந்த இரு நாட்களாக உயிரிழப்பு குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 69 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது


இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான நிலையி்ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 808 ஆகவும், உயிரிழப்பு 775 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 2991 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 42 ஆயிரத்து 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 24 ஆயிரத்து 811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1934 பேர் உயிரிழந்துள்ளனர்.ஃபிரான்ஸில் 22 ஆயிரத்து 304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also see...





இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading