உலகளவில் கொரோனா பாதிப்பின் நிலை என்ன...?

கோப்புப் படம்

கோப்புப் படம்

உலகம் முழுவதும் 90 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 23, 50,000திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கோரத்தாண்டவம் ஆடியுள்ள கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 22,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  பிரேசிலில் ஒரே நாளில் 34,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், உயிரிழப்பும் 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதேபோல் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

  அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டிலும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 34,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 10,87,000 என்ற எண்ணிகையை நெருங்கியுள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

  உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில், மார்ச் 25ஆம் தேதியில் இருந்து ஏறுமுகத்திலேயே இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது சற்று குறைந்து வந்தாலும், நாளொன்றுக்கு 7,000 பாதிப்பு என்ற எண்ணிக்கையில் இருந்து குறையவில்லை. அங்கு மொத்த பாதிப்பு 5,85,000தை நெருங்கியுள்ளது.

  இதற்கு மாஸ்கோவில் தேவையில்லாமல் ஊரடங்கை தளர்த்தியதே காரணம் என்ற உலக சுகாதார அமைப்பின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா, பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால், நாள்தோறும் 7,000 பாதிப்பு என்ற எண்ணிக்கையில் இருந்து சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க...

  தலைநகரில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  இதனிடையே சிங்கப்பூரில் 2-ம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் ஏராளமான பொதுமக்களை காண முடிகிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் தனிமனித இடைவெளி கடுமையாக பின்பற்றப்படுகிறது

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: