உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு 11,000-ஆக உயர்வு!

மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதாலும், இத்தாலியில் வயதானவர்கள் அதிகமுள்ளதாலும் உயிரிழப்பு சதவிகிதம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு 11,000-ஆக உயர்வு!
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்குதலால், உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 தாண்டியுள்ளது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்தனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உருவான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

வைரஸ் தாக்குதலில் சீனாவில் உயிரிழந்ததைவிட இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 41,035 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 3,405 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 33 000கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 000 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதாலும், இத்தாலியில் வயதானவர்கள் அதிகமுள்ளதாலும் உயிரிழப்பு சதவிகிதம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

Also see...
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்