• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உலகம் முழுவதும் 10 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: 50,000-த்தை தாண்டிய உயிரிழப்பு

உலகம் முழுவதும் 10 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: 50,000-த்தை தாண்டிய உயிரிழப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் கொரோனா விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், உலக அளவில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 884 பேர் உயிரிழந்தனர். இதேபோல் ஸ்பெயினிலும் ஒரேநாளில் 864 பேர் ஒரேநாளில் உயிரிழந்தனர். பிரிட்டனில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 563 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் ஒன்றாம் தேதியை மிக துயரமான நாள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் இருநாடுகளிலும் பத்தாயிரத்தை கடந்துள்ளது. சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் கடுமையான இழப்புகளை சந்தித்து வந்த இத்தாலி, தற்போது மீண்டெழத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி இத்தாலியில் ஒரேநாளில் 727 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் உயிரிழப்பு 837 ஆக இருந்த நிலையில், ஒரேநாளில் 100 என்ற அளவுக்கு உயிரிழப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டனில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்புகள், உயிரிழப்புகள் அந்நாட்டு பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. சுமார் 27 விழுக்காடு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. சுமார் 32 ஆயிரம் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயினில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 9 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.  ஸ்பெயின் வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 4 ஆண்டுகளுக்கு பின் 35 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவில் ஒரே நாளில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருமே வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.

    Also see:











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: