உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது...!

கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது...!
மாதிரிபடம்
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 41 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஸ்லோவேனியா நாடுகளில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.


ஈரானில் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 107 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த துணை நிற்பதாக தெரிவித்த அமெரிக்காவின் உதவியை, ஈரான் நிராகரித்துள்ளது.

13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டதால், 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக கருதப்படும் பெத்லஹேமில் உள்ள தேவாலயம் கொரோனா பீதியால் மூடப்பட்டது.வட கொரியாவில் இதுவரை யாரும் பாதிக்கப்படாத நிலையில், அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன், கொரோனாவின் பிடியில் உள்ள தென்கொரியா விரைவில் மீண்டுவர வேண்டுமென தெரிவித்துள்ளார்.கொரோனாவை கட்டுப்படுத்த சில நாடுகள் முழுவீச்சில் தயாராகவில்லை என உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வேதனை தெரிவித்துள்ளார்.

கரோனாவால் உலக பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்லும் என கூறியுள்ள சர்வதேச நாணய நிதியம், 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு உலக பொருளாதாரம் இந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் என எச்சரித்துள்ளது.Also see...
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading