கொரோனா அச்சுறுத்தல்: பாதிப்பைக் கட்டுப்படுத்த இத்தாலி முழுவதும் மூடப்படுவதாக பிரதமர் அறிவிப்பு!

ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: பாதிப்பைக் கட்டுப்படுத்த இத்தாலி முழுவதும் மூடப்படுவதாக பிரதமர் அறிவிப்பு!
ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மக்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க உள்ளதாக இத்தாலி பிரதமர் கிஸ்ஸெப்பே காண்டே அறிவித்துள்ளார்.

சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உருவெடுத்திருக்கும் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 9,172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 463 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி முழுவதும் மூடப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கிஸ்ஸேப்பே காண்டே அறிவித்துள்ளார். மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படியும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


ஏற்கனவே வெனிஸ் உள்ளிட்ட சில நகரங்களில் விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் தற்போது நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பணி நிமித்தமாகவோ, மருத்துவ காரணங்களுக்காகவோ அல்லது அத்தியாவசிய தேவைகளோ இல்லாமல் வெளியில் பயணிக்க வேண்டாம் என இத்தாலியின் 6 கோடி மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர்.

Also see...
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading