டெல்டா வேரியண்ட் தொடர்ந்து மாறுபடுவதால் ஒருங்கிணைந்த கொரோனா தொற்று நோய்களின் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸின் மரபணுவில்
டெல்டா பிளஸ் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இது மக்களிடையே வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த டெல்டா வகையானது குறைந்தது 98 உலக நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பல நாடுகளில் விரைவாக ஆதிக்கம் செலுத்தும் டெல்டா போன்ற அதிகம் பரவக்கூடிய கொரோனா நோயின் மாறுபாடுகளில் சிக்கி உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.
புதிதாக பரவும் இந்த டெல்டா வேரியண்ட்டை வலுவான கண்காணிப்பு, ஆரம்பகால கண்டறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் போன்ற பொது சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் என்று அவர் எச்சரித்தார். முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை பராமரித்தல், நெரிசலான இடங்களைத் தவிர்த்தல் மற்றும் உட்புற பகுதிகளை நன்கு காற்றோட்டமாக வைத்திருத்தல் ஆகியவை இதற்கு அடிப்படையாகும் எனவும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் அவர் கூறுகையில், தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், உலகளாவிய பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்கும் சமூக பொறுப்புடன் செயல்படுவதே சிறந்த வழியாகும் எனக் கூறினார். வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள், அனைத்து நாடுகளிலும் குறைந்தது 10 சதவீத மக்களுக்காவது தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துமாறு ஒவ்வொரு நாட்டின் தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். விரைவில் தாங்கள் அதிக தடுப்பூசி மையங்களை உருவாக்க உள்ளதாகவும் கூறினார். உலகளாவிய தடுப்பூசி திறனை உயர்த்துவதன் மூலம் மட்டுமே விரைவில் நாம் இந்த கொடிய தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் டெட்ரோஸ் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.