பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை கபளீகரம் செய்கின்றன, ஏழை நாடுகள் அவதிப்படுகின்றன: உலகச் சுகாதார அமைப்பு கவலை

டெட்ராஸ் அதானோம்

உலக மக்கள் தொகையில் அதிக வருவாய் கொண்ட நாடுகள் 15% மக்கள் தொகையைத்தான் கொண்டுள்ளது. ஆனால் இந்த பணக்கார நாடுகள் உலக தடுப்பூசிகளில் 45% தடுப்பூசிகளை வைத்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா வாக்சின் அல்லது கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாட்டில் பணக்கார நாடுகளுக்கும் ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள ஏழைநாடுகளுக்கும் உள்ள மாபெரும் இடைவெளியை சுட்டிக்காட்டி உலகச் சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

  உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதனம் கேப்ரியேசஸ் இந்த இடைவெளியைத்தான் ‘vaccine apartheid' அதாவது நிறவெறி பேத இடர்பாட்டை உலகம் எதிர்கொள்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.

  நிறவெறியில், கருப்பர்கள் மீதான நிறத்துவேஷத்தில் முந்தைய இனவேறி தென் ஆப்பிரிக்கா கருப்பர்களை ஒதுக்கி அவர்கள் வாழிடத்தை மற்ற இனங்களிலிருந்து பிரித்து வைத்தனர். கருப்பர்களின் சமூக வாழ்வையே புறமொதுக்கினர். அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும் கிடையாது இது அபார்தெய்ட் என்று அழைக்கப்பட்டது.

  இந்நிலையில் பாரீஸ் அமைதி அமைப்பில் பேசிய டெட்ராஸ் அதனம் கேப்ரியாசிஸ், “நான் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறேன் உலகம் தடுப்பூசி நிறவெறி வேற்றுமை ‘இடர்பாட்டில்’ இல்லை, தடுப்பூசி இன/நிறவெறி வேற்றுமைக்குள்தான் உலகமே உள்ளது என்று கூறுவேன்.

  உலக மக்கள் தொகையில் அதிக வருவாய் கொண்ட நாடுகள் 15% மக்கள் தொகையைத்தான் கொண்டுள்ளது. ஆனால் இந்த பணக்கார நாடுகள் உலக தடுப்பூசிகளில் 45% தடுப்பூசிகளை வைத்துள்ளனர். குறைந்த மற்றும் குறைந்த-நடுத்தர வருவாய் நாடுகள் உலக மக்கள் தொகையில் பாதியைக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகள் உலக தடுப்பூசிகளில் 17% தடுப்பூசிகளை மட்டும்தான் வைத்துள்ளன. எனவே இடைவெளி மிகப்பெரியது.

  124 நாடுகளுக்கு மொத்தம் 6 கோடியே 30 லட்சம் தடுப்பூசிகள் தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் 0.5% தடுப்பூசிகள்தான் அனுப்பப்பட்டுள்ளன.

  வாக்சின் உற்பத்தியில் தொழில்நுட்ப பகிர்வு இல்லாததே மற்ற நாடுகள் பிற நாடுகளின் ஏற்றுமதியை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றது.

  பணக்கார நாடுகள் தங்கள் நாட்டின் குழந்தைகள், மற்றும் பதின்ம வயதினருக்குக் கூட தடுப்பூசி செலுத்தத் தொடங்கி விட்டன, ஆனால் இடர்பாட்டில் உள்ள பிறநாடுகளின் மருத்துவப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு இன்னும் தடுப்பூசிப் போடப்படாமல் இருக்கிறது, இதுதான் வேறுபாடு, வேற்றுமை என்கிறேன்.” என்றார்.

  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 8 கோடி தடுப்பூசிகளை அடுத்த 6 வாரங்களில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.
  Published by:Muthukumar
  First published: