Vaccination : ஏழை நாடுகளில் வெறும் 0.3 சதவீத டோஸ் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளன - உலக சுகாதார நிறுவனம் வருத்தம்

டெட்ராஸ் அதானோம்

கொரோனா தடுப்பூசி பணக்கார நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் அளவிற்கு ஏழை நாடுகளுக்குக் கிடைப்பதில்லை என உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வருத்தம் தெரிவித்துள்ளளார்.

  • Share this:
    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், தடுப்பூசிகள் இன்னும் ஏழை நாடுகளுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

    உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் போர்ச்சுகல் நாட்டில் காணொலி கட்சி மூலம் நடந்த சுகாதார மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இதில் 82 சதவீத டோஸ்கள் உயர், மேல் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், குறைவான வருவாயைக் கொண்ட ஏழை நாடுகளில் வெறும் 0.3 சதவீத டோஸ் கொரோனா தப்பூசிகளே போடப்பட்டுள்ளன” என்று கூறினார்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கும், கொரோனா வைரஸ் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த இங்கிலாந்தில் பொது சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் மூலம் கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்ட்ராஜெனகா உள்ளிட்ட எந்த தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கும் இது பொருந்தும் என்றும், அதேபோல, தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது என்றும், அதில் வயது வித்தியாசம் எதுவுமின்றி இதே நிலை இருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிக்கின்றன.

    ஒரு டோஸ் தடுப்பூசி போட்டாலே வீடுகளில் 50 சதவீதம் தொற்று பரவல் குறைவது உறுதியாகி இருக்கிறது. கொரோனா தடுப்பூசி நம்மையும், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கிறது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

    Must Read : மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

     

    ஆகவே, தேசிய சுகாதார சேவை மையத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும்போது மக்கள் காலதாமதம் இன்றி உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published: