Vaccination : வெவ்வேறு தடுப்பூசிகளை போடுவது ஆபத்தானது - உலக சுகாதார நிறுவனம்

தடுப்பூசி

வசதி உள்ள நாடுகள் தடுப்பூசி போடும் பணியை விரைவாக செய்து வருகின்றன. ஏழை நாடுகளில் தடுப்பூசி கிடைப்பதில்லை.

 • Share this:
  கொரோனா தொற்றை தடுப்பதற்கு இரு வெவ்வேறு நிறுவனத்தின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் காணொலிக்காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “பல நாடுகளில் கொரோனா 2ஆவது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 3ஆவது அலை குறித்த எச்சரிக்கையும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம் ஆகும். இங்கே கொரோனா தடுப்பூசிகளைப் பொருத்தமட்டில் ஒரு ஆபத்தான போக்கு உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது, பொருத்திப் பார்ப்பதெல்லாம் நடக்கிறது. இது ஆபத்தானது. இது தொடர்பாக நம்மிடம் தரவுகள் இல்லை. ஆதாரங்கள் இல்லை.

  சவுமியா சுவாமிநாதன்


  2ஆவது, 3ஆவது, 4ஆவது டோஸ் தடுப்பூசிகளை எப்போது யார் போட்டுக்கொள்வது என்று மக்கள் தீர்மானிக்கத் தொடங்கினால், அது நாடுகளில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். இது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன, அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும்” இவ்வறு அவர் கேட்டுக்கொண்டார்.

  இந்நிலையில், ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள உருமாறிய 'டெல்டா' வகை கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.

  Read More : கொரோனா மூன்றாவது அலை கணிப்பை மக்கள் வானிலை அறிக்கைபோல நினைக்கின்றனர் - மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை

  இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “உலகம் முழுதும் 10 வாரங்களாக குறைந்து வந்த கொரோனா உயிரிழப்புகள் சமீப நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. தொடர்ந்து நான்கு வாரங்களாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. உருமாறிய 'டெல்டா' வகை வைரஸ் பரவல் உலகம் முழுதும் வேகம் எடுத்துள்ளதே இதற்குக் காரணம்.

  Must Read : சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  ஏற்கனவே 104க்கும் அதிகமான நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுதும் பரவத் துவங்கியுள்ளது. தொற்று ஏற்படுத்துவதில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் வைரசாக டெல்டா விரைவில் மாறும். உலகம் முழுதும் கொரேனா வைரஸ் பரவல் ஒரே மாதிரியாக இல்லை. இருப்பவர்கள் இல்லாதவர்கள் என இரண்டு விதமாக பரவல் பிரிந்துள்ளது. வசதி உள்ள நாடுகள் தடுப்பூசி போடும் பணியை விரைவாக செய்து வருகின்றன. ஏழை நாடுகளில் தடுப்பூசி கிடைப்பதில்லை. அங்கு நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது.

  சில நாடுகளில் சுகாதார பணியாளர்கள் முன்கள பணியாளர்களுக்கே தடுப்பூசி போடப்படாத நிலையில் மூன்றாவது 'பூஸ்டர் டோஸ்' கேட்டு பல நாடுகள் நெருக்கடி தருகின்றன. இதுபோன்ற நிலைமை தவிர்க்கப்பட வேண்டும். தடுப்பூசியே கிடைக்காத நாடுகளுக்கு முதலில் தடுப்பூசிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: