ஆபத்து மற்றும் பாதிப்பு...கொரோனா மிக தீவிரமாக பரவும்...! உலக சுகாதார நிறுவன இயக்குநர் எச்சரிக்கை

ஆபத்து மற்றும் பாதிப்பு...கொரோனா மிக தீவிரமாக பரவும்...! உலக சுகாதார நிறுவன இயக்குநர் எச்சரிக்கை
  • News18 Tamil
  • Last Updated: February 29, 2020, 10:14 AM IST
  • Share this:
கொரோனா வைரஸ் சீனாவைத் தாண்டி பிற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மேலும் 44 பேருக்கு கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 327 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து, நைஜீரியா, நியூசிலாந்து, பெலாரஸ், நெதர்லாந்து நாடுகளில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா பரவும் ஆபத்து தீவிரமான நிலைக்கு உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

Also see...உலகை அச்சுறுத்தும் கொலைக்கார 'கொரோனா'... வைரஸ் தாக்குதல் அறிகுறி & தடுப்பு நடவடிக்கைள்


இது குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குநர் கெப்ரேயெசுஸ் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதித்த நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. தொற்றுநோய் நிபுணர்கள் இடைவிடாது கண்காணித்து வருகிறார்கள். கொரோனா பரவக் கூடிய ஆபத்து மற்றும் பாதிப்பு மிக தீவிரமான நிலைக்கு உயர்ந்துள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் உலகம் முழுவதும் 20 மருந்துகள் சோதனை முறையில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த சில வாரங்களில் முதல் முடிவு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவை விட அது பற்றிய அச்சமும், வதந்தியும், அவதூறுமே மிகப்பெரிய எதிரியாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் விமர்சித்துள்ளது.

Also see...சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம்- எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்சுவிட்சர்லாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆயிரம் பேருக்கு மேல் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஜப்பான் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.

ஈரானில் 34 பேர் உயிரிழந்ததாக அரசு கூறியுள்ளபோதும், உண்மையான எண்ணிக்கை 210 என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. வைரஸ் அச்சுறுத்தலால் ஈரான் எல்லையை மூடியுள்ள பாகிஸ்தான், தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் ஊர் திரும்புவதற்காக எல்லையை திறந்துள்ளது.
First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading