கொரோனா பாதிப்பை உலகளாவிய தொற்றுநோய் என அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா-வை அடுத்த மாதம் 15-ம் தேதிவரை ரத்துசெய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை உலகளாவிய தொற்றுநோய் என அறிவித்தது உலக சுகாதார அமைப்பு
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா வைரஸை உலகளாவிய தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தாலியில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா-வை அடுத்த மாதம் 15-ம் தேதிவரை ரத்துசெய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  உலகம் முழுவதும் 1 லட்சத்து 26ஆயிரத்து 121 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4616 பேர் உயிரிழந்துள்ளனர்.


Also read: தமிழகத்தில் ட்ரெண்டாகும் கொரோனா வைரஸ் புடவை...!

இலங்கையில் வெளி நாடுகளிலிருந்து வந்தபின் விசா பெற்றுக் கொள்ளும் நடைமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அயர்லாந்து, ஸ்வீடன் நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸை உலகளாவிய தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம், சீனாவுக்கு வெளியே கடந்த இரண்டு வாரங்களில் நோய்த் தாக்கம் 13 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.Also read: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 73-ஆக அதிகரிப்பு: அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிப்பு

மேலும், கொரோனா வைரஸை உலக சுகாதார அமைப்பு நாள் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது பரவிவரும் விதம் மற்றும் தீவிரம் குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். தேவையான அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, கொரோனா வைரஸை உலகளாவிய தொற்று நோயாக அறிவிக்கிறோம். உலகளாவிய தொற்று என்ற வார்த்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனை தவறாக பயன்படுத்தினால், தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தும். நமது போராட்டம் முடிந்துவிட்டது என்று கருதினால், தேவையில்லாத பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என கூறியுள்ளார்.

Also read: ஏன் திமிங்கலம் சர்க்கரை பொங்கல எல்லாரும் பானைல தான வைப்பாங்க...ரஜினியின் பிரஸ் மீட் மீம்ஸ்!
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading