இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் சாப்பிடுவதும், குடிப்பதும் ஏற்கத்தக்கது அல்ல - உலக சுகாதார அமைப்பு

சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகமாக்கியிருக்கிறது. மீண்டும் உலகை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு பல பத்தாண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதனம் கெப்ரியோசெஸ் தெரிவித்துள்ளார்.

இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் சாப்பிடுவதும், குடிப்பதும் ஏற்கத்தக்கது அல்ல - உலக சுகாதார அமைப்பு
டெட்ரோஸ் - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
  • Share this:
கொரோனா என்னும் சிறு வைரஸால் உலகம் மிக மோசமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. கோவிட் 19 அன்பானவர்களை இழக்க வைத்திருக்கிறது. சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகமாக்கியிருக்கிறது. மீண்டும் உலகை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு பல பத்தாண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதனம் கெப்ரியோசெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பிறகான உலகில், மிக அதிகமாக கார்பண்டை ஆக்சைடு வெளியேற்றத்தை நம்மால் விலையாகக் கொடுக்க முடியாது.

மேலும் பார்க்கவும்:-சமூகவலைதளங்களில் ஏன் இவ்வளவு வெறுப்பு? இன்னொருவர் இடத்தில் இருந்து யோசித்த பின்பு பேசுங்கள் - ரத்தன் டாடா

சுத்தமான காற்றை அழித்து சூழலை கெடுக்கும் நிலை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லலாம். சாப்பிடக்கூடாத உணவுகளை சாப்பிட்டு, பானங்களை பருகி, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுத்துக்கொள்ளும் நிலையைக் கொண்டு வரக்கூடாது. சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டே மற்றொரு புறத்தில் வளமான வாழ்க்கைக்கு ஆசைப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார் டெட்ரோஸ்.

சமவாய்ப்புகளும் ஆரோக்கியமும் நிறைந்த உலகத்தை குழந்தைகளுக்கும், அதற்கடுத்து வரும் தலைமுறைகளுக்கும் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று டெட்ரோஸ் பேசியுள்ளார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading