Home /News /coronavirus-latest-news /

சீனாவிற்கு எதிராகத் திரளத் தொடங்கிய பாதிக்கப்பட்ட நாடுகள்!

சீனாவிற்கு எதிராகத் திரளத் தொடங்கிய பாதிக்கப்பட்ட நாடுகள்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

சீன மருத்துவ பொருட்களின் தரம் குறித்து ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டிவந்த நிலையில், இந்தியாவும் சீன ரேபிட் டெஸ்ட் கிட்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பியது.

    சீனாவில் உருவாகி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், சீனாவிற்கு எதிராக அணி திரளத் தொடங்கியுள்ளன. சீனாவிடம் இழப்பீடு கோர உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    சீனாவின் மையப் பகுதியான ஊஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. கொரோனாவின் பிடியில் இருந்து சீனா மீண்டுவந்த நிலையில், உலகத் தலைவர்களின் கோபப் பார்வை சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்பது உள்பட அனைத்து தகவல்களையும் சீனா பகிர்ந்தால் மட்டுமே உலக நாடுகள் இதிலிருந்து மீண்டுவரும் வழியைக் கண்டுபிடிக்க முடியும் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறினார்.

    இதே போல கொரோனா வைரஸின் ஆரம்பப்புள்ளியை கண்டுபிடிக்க வேண்டுமென ஆஸ்திரேலியா கூறியது. அதற்கு பதிலளித்த சீனத் தூதர் Cheng Jingye ஆஸ்திரேலிய தயாரிப்புகளை சீனா புறக்கணிக்கும் என கூறினார். இதற்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா பரவத் தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என நம்புவதாகவும், விரைவான நடவடிக்கை எடுத்திருந்தால் உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்காது எனவும் தெரிவித்தார். .

    கொரோனா சேதத்துக்கு சீனாவை பொறுப்பாக்க பல வழிகள் உள்ளதாக தெரிவித்த டிரம்ப், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். சீனாவிடம் 16 ஆயிரத்து 500 கோடி டாலர் இழப்பீடு கோர வேண்டுமென ஜெர்மனி நாளிதழில் வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், இதை விட அதிக தொகையை சீனாவிடம் தாங்கள் கோர உள்ளதாக தெரிவித்தார்.

    சீன மருத்துவ பொருட்களின் தரம் குறித்து ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டிவந்த நிலையில், இந்தியாவும் சீன ரேபிட் டெஸ்ட் கிட்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பியது. சீனாவுடன் வர்த்தகம் செய்ய பல நாடுகள் தயங்குவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

    இது ஒரு வகையில் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துவிட்டதாகவும், இதைப் பயன்படுத்தி வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். உலக பொருளாதாரம் பாதிக்கப்பட காரணமாக இருந்த சீனா மீது பல நாடுகள் ஓரணியில் இணைந்து விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: China, CoronaVirus

    அடுத்த செய்தி