பெண்கள் மாதவிடாய் சமயத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..? மருத்துவரின் விளக்கம்..!

பெண்கள் மாதவிடாய் சமயத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..? மருத்துவரின் விளக்கம்..!

கொரோனா தடுப்பூசி

மருத்துவ ரீதியாக எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஒரு சிலருக்கு லேசான காய்ச்சல் ,தலைவலி, உடல் வலி ,அசதி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

  • Share this:
மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்த நிலையில் பலருக்கும் அதுகுறித்த பல கேள்விகள் , சந்தேகங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதில் அதிகமாக கேட்கப்படுவது மாதவிடாய் சமயத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..? அதனால் பாதிப்பு வருமா என்பதுதான்.  எனவே உங்களின் சந்தேகத்தைப் போக்க சில கேள்விகளுக்கான பதில்களை அளிக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா.

1. மாதவிடாய் சமயத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா??

போட்டுக் கொள்ளலாம்.

மருத்துவ ரீதியாக எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஒரு சிலருக்கு லேசான காய்ச்சல் ,தலைவலி, உடல் வலி ,அசதி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நமக்கு சௌகரியமான சமயத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் அதிகமான வயிற்று வலியும் சோர்வும் ஏற்படும். அத்துடன் தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு சிரமங்கள் கூடுதல் ஆகலாம். அவர்கள் தடுப்பூசியை சிறிது தள்ளி எடுத்துக்கொள்ளலாம்.



2. தடுப்பூசி போட்டுக் கொண்ட மாதத்தில் வரும் மாதவிடாய் தள்ளிப் போகுமா ?அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுமா??? வலி உண்டாகுமா???

மாதவிடாய்கும் தடுப்பூசிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அதனால் ஊசி போட்டுக்கொண்ட மாதங்களில் உங்களுக்கு கூடுதலான ரத்தப் போக்கோ ,அதிகமான வலியோ தடுப்பூசியால் ஏற்படாது. இது வரை தடுப்பூசி எடுத்துக்கொண்ட லட்சக்கணக்கான பெண்களில் பலருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் மாதவிடாயில் உண்டாக வில்லை. எனவே தைரியமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.

லேசான கொரோனா அறிகுறிகள் : வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வழிமுறைகள்..!

3. தடுப்பூசி போட்ட பிறகு மாதவிடாயில் பிரச்சனை வருமா?

மாதவிடாய்க்கும் தடுப்பூசிகள் எந்தத் தொடர்பும் கிடையாது ஆனால் தடுப்பூசி போட்ட பிறகு பயத்தால் சிலர் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மன அழுத்தம்  -ஆல் உங்கள் மாதவிடாயில் சில மாற்றங்கள் உண்டாகலாம். தடுப்பூசியால் உண்டாவதற்கான வாய்ப்பு இல்லை.



4.தடுப்பூசி போடுவதால் தீட்டு நின்றவர்களுக்கு தீட்டு வந்துவிடுமா?

வருவதற்கு வாய்ப்பில்லை.

தகுதி உள்ளவர்கள், தயக்கமில்லாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.
Published by:Sivaranjani E
First published: