காரை வழிமறித்த காவலர் மீது எச்சில் பதித்து அச்சப்படுத்திய பெண்: கண்டிக்கும் நெட்டிசன்கள் - வீடியோ

காரை வழிமறித்த காவலர் மீது எச்சில் பதித்து அச்சப்படுத்திய பெண்: கண்டிக்கும் நெட்டிசன்கள் - வீடியோ
கொரோனா
  • Share this:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காரை வழிமறித்த காவலர் மீது எச்சில் பதித்து பெண் ஒருவர் அச்சத்தை ஏற்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல இடங்களில் ஒரு சிலர் காரணமின்ற சாலையில் அலைகின்றனர். அவர்களைக் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்புகின்றனர். பல இடங்களில் காரணமில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கார் சென்றுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் காரை நிறுத்தி கார் ஓட்டுநரிடம் வெளியில் வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது, காரின் பின்இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வெளியில் வந்து, வேகமாக சென்று விசாரணை செய்த காவலர் மீது நக்குவது போல் செய்து எச்சில் செய்து காவலரை அச்சப்படுத்தினர்.

பின்னர், காவலருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த பெண் நான் தனிமையில் இருந்து வருகிறேன். நான் மருத்துவரைச் சந்திக்கவேண்டும்’ என்று வாதிடுகிறார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பலரும் அந்தப் பெண்ணின் செயலைக் கண்டித்துவருகின்றனர்.

Also see:
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்