Home » News » Coronavirus-latest-news » WITH MORE THAN 500 INFECTIONS SPREADING IN A SINGLE DAY IN THE CHENGALPATTU DISTRICT VIN

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் அதிகரிக்கும் கொரோனா... ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியதால், சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக உருவெடுத்துள்ளது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் அதிகரிக்கும் கொரோனா... ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று உறுதி!
கோப்புப் படம்
  • Share this:
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக 513 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதுமட்டுமின்றி சென்னைக்கு பிறகு, ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டிய மாவட்டமாகவும் செங்கல்பட்டு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 112 பேர் உயிரழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது.


இன்று 112 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4461 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 6031 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 2,14,815 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Also read... பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

வேலூர் மாவட்டத்தில் மேலும் 206 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 276 பேருக்கும், குமரி மாவட்டத்தில் 150 பேருக்கும் கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பரவியுள்ளது.புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகி இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை மங்கலம் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading