HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»wisconsin pharmacist who destroyed more than 500 vaccine doses believes earth is flat fbi says mut

பூமி தட்டையானது, தடுப்பூசி ஆண்மையை அழித்து விடும்- கொரோனா  தடுப்பூசியைச் சேதம் செய்த நபரின் அதீத நம்பிக்கைகளும் சதிக்கோட்பாடும்

கோவிட்-19 தடுப்பூசியில் மைக்ரோ சிப் உள்ளது, இது பலரது ஆண்மையையும் அழித்து விடும் என்று வதந்தி பரப்பி வந்தவர் இந்த சதிக்கோட்பாட்டு நம்பிக்கையுடைய ஃபார்மசிஸ்ட்.

பூமி தட்டையானது,  தடுப்பூசி ஆண்மையை அழித்து விடும்- கொரோனா  தடுப்பூசியைச் சேதம் செய்த நபரின் அதீத நம்பிக்கைகளும் சதிக்கோட்பாடும்
கொரோனா தடுப்பூசி வதந்தி பரப்பிய, சேதம் செய்த பார்மசிஸ்ட் பிராண்டன்பர்க்.
  • Share this:

கொரோனா வைரஸில் உலகமே தத்தளித்து வரும் நிலையில் விடிமோட்சமாக வந்த மாடர்னா தடுப்பூசியின் 500 குப்பிகளை சேதம் செய்ததாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்த விஸ்கான்சினைச் சேர்ந்த ஃபார்மசிஸ்ட் (மருந்தாளுநர்) ஸ்டீவன் பிராண்டன்பர்க் (46), பூமி உருண்டையானதல்ல தட்டையானது என்று டாலமே காலத்து நம்பிக்கைக் கொண்டவர் என்றும் உலகமே அஞ்சும் கான்ஸ்பிரஸி தியரி அதாவது சதிக்கோட்பாடுகளில் ஈடுபாடுடையவர் என்றும் எஃப்.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பரில் விஸ்கான்சினில் உள்ள கிளினிக் ஒன்றில் குளிர்பதனப்பெட்டியில் இருந்த 57 மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிகளை ரெஃப்ரிஜிரேட்டரிலிருந்து அவர் வெளியே எடுத்தார், அப்படி எடுத்தால் அது சேதமடையுமென்று தெரிந்தே இதைச் செய்தார். இவர் டிசம்பர் 31ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இவரது நம்பிக்கைகள் பெரும்பாலும் அறிவு விரோதமாகவும், நிறுவப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு எதிராகவுமே இருந்ததாக இவருடன் பணியாற்றியவர்கள் எஃப்.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.



இவரது அசட்டுப்பிசட்டு நம்பிக்கைகளில் சில:

பூமி உருண்டையல்ல தட்டையானது.

மக்கள் கடவுளைக் காணவிடாமல் அரசு வைத்த மறைப்பே வானம்

கோவிட்-19 தடுப்பூசியில் மைக்ரோ சிப் உள்ளது, இது பலரது ஆண்மையையும் அழித்து விடும்.

இவர் பல நாட்கள் இரவில் பணியாற்றியதால் தூக்கமின்மை காரணமாக ’குளோனாசிபாம்’ என்ற தூக்க மருந்தை எடுத்துக் கொண்டதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைத்த தடுப்பூசி 57 நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியை சேதம் செய்ய முயன்றதாக இவர் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். இவர் பணியாற்றிய அரோரா பார்மசியின் டெக்னீஷியன் சாரா ஸ்டிக்கர் விசாரணை அதிகாரிகளிடம் கூறும்போது, “பிராண்டன்பர்க் சதிக்கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர், அவரும் இதில் ஈடுபட்டவர்” என்றார்.

வாக்சினை பிரிஜ்ஜிலிருந்து எடுத்த பிராண்டன்பர்க் அதை 3 மணி நேரத்துக்கும் மேலாக வெளியே வைத்துள்ளார், இது அபாயகரமான செயல். பிறகு பிரிஜ்ஜில் வைத்துள்ளார். பிறகு மீண்டும் வெளியே எடுத்து 9 மணி நேரம் வெளியே வைத்துள்ளார். இதனால் சுமார் 600 தடுப்பூசிக் குப்பிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று யுஎஸ் எஃப்டிஐ உத்தரவிட்டது.

ஏன் இப்படி செய்தேன்?- பிராண்டன்பர்க் விளக்கம்:

பிரிஜ்ஜிலிருந்து வெளியே எடுத்து வெளி உஷ்ணத்தில் வைத்தால் வாக்சின் வேலை செய்யாது என்று நினைத்தே வைத்தேன். ஏனெனில் இந்த வாக்சின் கெடுதல் என்று அவர் தன் வழக்கறிஞருக்கு மின்னஞ்சல் செய்துள்ளார்.

இவர் பிப்ரவரி 9ம் தேதி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார். இவரது விநோதமான நடத்தையினால் இவரது மனைவி கிரெட்சன் இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் வாக்சினை சேதப்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறையும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 2,50,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Published by:Muthukumar
First published: