Home /News /coronavirus-latest-news /

புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பு அறிவிப்பில் மாற்றம் - சைடிஷ் உடன் திரண்ட குடிமகன்கள் ஏமாற்றம்

புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பு அறிவிப்பில் மாற்றம் - சைடிஷ் உடன் திரண்ட குடிமகன்கள் ஏமாற்றம்

மதுபான கடையை திறக்க கை எடுத்து கும்பிட்ட மது பிரியர்கள்

மதுபான கடையை திறக்க கை எடுத்து கும்பிட்ட மது பிரியர்கள்

”ஒரு சிலர் மது அருந்தத்  தேவையான சைடிஷ்களை கையில் வாங்கி வந்து காத்திருந்தனர்”

புதுச்சேரியில் மதுபானக் கடை எப்போது திறக்கப்படும்? என்று மது பிரியர்கள் கை எடுத்து கும்பிட்டு சென்றனர். 

கொரோனா  காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கிறது. இதனால் மார்ச் 23-ம் தேதி மூடப்பட்ட மதுபான கடைகள் புதுச்சேரியில் இன்று வரை திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறந்திருந்தும் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் மது பிரியர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், மது பானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்படாததால் ஆளுநர் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான அனுமதியுடன் நாளை கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது. இதனால் நள்ளிரவே அமைச்சரவை கூடி மதுபானக் கடைகள் இன்று திறப்பு இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த தகவல் பொது மக்களிடையே சென்று அடையாத நிலையில் இன்று காலை ஏராளமானோர் மதுக்கடைகள் முன்பு கூடினார்கள். மேலும் மதுக்கடைகளை திறக்க ஊழியர்களும் வந்து காத்திருந்தனர். ஆனால், உரிய உத்தரவு இல்லாத காரணத்தினால் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.

இதனால், மது வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு மணிநேரமாக மதுபானக் கடை முன்பு காத்திருந்தும் பதில் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் மது அருந்தத்  தேவையான சைடிஷ்களை கையில் வாங்கி வந்து காத்திருந்தனர். இதுமட்டுமல்லாமல் மதுபானக் கடை எப்போது திறக்கப்படும் என சிலர் கையெடுத்து கும்பிட்டும் சென்றனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published:

Tags: Lockdown, Puducherry

அடுத்த செய்தி