கொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து!

2-ம் உலகக் போருக்குப் பின் முதல்முறை விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து!
2-ம் உலகக் போருக்குப் பின் முதல்முறை விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தியுள்ள கொரோனாவால், இங்கிலாந்து தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழமையான விம்பிள்டன் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆல் இங்கிலாந்து டென்னிஸ் சங்கத்தின் அவசரக் கூட்டம் கூடியது.

இதில், விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், வீரர், வீராங்கனைகள் மற்றும் போட்டியை காண வரும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், 134-வது தொடர் 2021-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், 1945 இரண்டாம் உலகக் போருக்குப் பின் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...



இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.






First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading