• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஊரடங்கு நீட்டிப்பா?- மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை..!

ஊரடங்கு நீட்டிப்பா?- மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை..!

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.

  • Share this:
    கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சில மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் மீண்டும் பேசுகிறார்.

    அப்போது, நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

    இதில் முதலமைச்சர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில், முடக்கத்தை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை நாளையோ, நாளை மறுதினமோ மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 14-ஆம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருப்பதால், ஒரு சில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சில மணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: