ஹோம் /நியூஸ் /கொரோனா /

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது...?

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது...?

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ம் தேதி முடிவெடுக்கப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ மற்றும் மாநில அளவிலான பாடத்திட்ட மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் அரசுக்கு முக்கியம் என தெரிவித்தார்.

ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்தும் திட்டம் உள்ளதாகவும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பது குறித்து சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: CoronaVirus, Lockdown, School education, Tamilnadu