கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்களா?

கோவிட்-19

மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று குழந்தைகள் நல மருத்துவ சங்கம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 • Share this:
  கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், அதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்று பரவும் தகவலில் உண்மை இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

  கொரோனா முதல் அலையின்போது உலகம் முழுவதும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அலையில் நடுத்தர வயதினர், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் வேகமாக தகவல் பரவியது.

  இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா விளக்கமளித்துள்ளார். அதன்படி மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று குழந்தைகள் நல மருத்துவ சங்கம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  எனவே கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை நிச்சயம் பாதிக்காது என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: