அக்டோபரில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் செல்போனுக்கு கிடைத்த அதிர்ச்சிகர மெசேஜ்..

அக்டோபரில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் செல்போனுக்கு கிடைத்த அதிர்ச்சிகர மெசேஜ்..

கோப்புப் படம்

கேரளாவில் (Kerala) உள்ள ஒரு தனியார் ஆய்வகம் அண்மையில் ஏராளமான மக்களை, பெரும்பாலும் மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு, 'போலி' கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழ்களை ('fake' COVID-19 negative) வழங்கியது.

 • Share this:
  கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றி உள்ளது. ஒரு சிலரின் வாழ்க்கையே இந்த கொரோனாவால் முடிந்துவிட்டது. இருப்பினும் ஒரு சிலர் இந்த நிலையிலும் பணம் சம்பாதிப்பதை முதன்மையாக கொண்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாடியதை நாடறியும். அந்த வகையில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் (RT-PCR tests) அறிக்கைகள் பல நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. பெருகி வரும் தொற்றுநோய்க்கு மத்தியில், நாடு முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் சோதனைகளுக்கான (coronavirus tests) அறிக்கை பெரும்பாலும் தவறான அறிக்கைகள் என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

  உதாரணத்திற்கு ஒருவருக்கு டெஸ்ட் செய்தால் முதலில் பாசிட்டிவ் என்றும் மீண்டும் எடுத்தால் நெகடிவ் என்றும் முடிவுகள் வந்து பல நேரங்களில் அது பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது. இன்னும் சில சம்பவங்களில் ரிசல்ட் வேறு ஒருவருக்கு மாறிவிடுவதும் உண்டு. எனவே கொரோனா சோதனை கருவியின் அறிக்கைகள் சிக்கல்களால் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் பாட்டியாலாவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு, அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று SMS வழியாக வந்துள்ளது. அந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா டெஸ்டில் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் அந்த பெண்மணியின் கணவர் கொரோனாவால் முன்னர் பாசிட்டிவ் என்ற முடிவை பெற்று சில மாதங்களுக்கு முன் இறந்தும் விட்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் (Indian Express) செய்தி வெளியிட்டுள்ளது.

  பாட்டியாலாவைச் சேர்ந்த சலீம் கான் (Saleem Khan) அக்டோபர் 31-ஆம் தேதி அம்பலாவில் உள்ள மிஷன் மருத்துவமனையில் (Mission Hospital at Ambala) கொரோனா வைரஸ் காரணமாக காலமானார்.  இறந்த சலீம் கானின் மனைவியான சோனியா தற்போது ஒரு செய்தியை வெளி உலகிற்கு கொண்டுவந்துள்ளார்.

  புதிய வகை கொரோனா பரவலால் அச்சம்.. இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து ரத்து

  ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாளராக இருந்த அவரது கணவர் அக்டோபரில் கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு அவர் கோவிட் -19 க்கான டெஸ்ட் செய்தபின் டெஸ்ட் முடிவுகளில் பாசிட்டிவ் என்று முடிவு வந்தது. அக்டோபர் 14-ம் தேதி அவர் தனக்கு தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு, ராஜ்புரா அரசு மருத்துவமனையில் (Rajpura Government Hospital) சிகிச்சை பெற்றார்.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அம்பாலாவில் உள்ள மிஷன் மருத்துவமனையில் (Mission Hospital at Ambala) அனுமதிக்கப்பட்டார். சிறிது நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். ஆனால் சோனியா இப்போது விவரிக்க முடியாத ஒரு செய்தியை பெற்றுள்ளார். அதாவது டிசம்பர் 2-ஆம் தேதி, சோனியாவின் மறைந்த கணவரின் தொலைபேசிக்கு  ‘myGOV’ இலிருந்து ஒரு SMS வந்தது அதில், “சலீம் கானுக்காக சேகரிக்கப்பட்ட விரைவான ஆன்டிஜென் மாதிரி (Id:03041252464) SRFID 0304100252813 டிசம்பர் 2, 2020, 10:14 முற்பகல் மாதிரி சோதனை செய்யப்பட்டு சோதனை அறிக்கை கிடைக்கும் வரை உங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்”.

  மிரட்டும் கொரோனா.. உலகளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு..

  பாட்டியாலா ஆய்வகத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதாக வந்த எஸ்.எம்.எஸ். 6 மணிநேரம் நீடித்த இந்த குழப்பத்திற்குப் பிறகு, சோனியாவுக்கு 'PBGOVT' இலிருந்து மற்றொரு குறுஞ்செய்தி வந்தது: அதில், "சலீம் கானுக்காக எடுக்கப்பட்ட விரைவான ஆன்டிஜென் மாதிரி நெகட்டிவாக வந்துள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது.

  இதனால் முற்றிலும் மன உளைச்சலுக்கு ஆளான சோனியா, சமீபத்தில் அம்பாலாவின் கிராம பஞ்சாயத்திலிருந்து இறந்த சலீமுடைய இறப்பு சான்றிதழை (Death Certificate) பெற்றதாக கூறப்படுகிறது. முடிந்துபோன ஒருவரின் வாழ்க்கைக்கு இந்த SMS செய்திகள் களங்கம் ஏற்படுத்துவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

  தனது உறவினர்களுக்கு இந்த குழப்பமான செய்திகளைப் பகிர்ந்து கொண்ட சோனியா, SMS-இல் நோயாளியின் முகவரி கலோ மஜ்ரா நியாமத்பூர் (Kalo Majra Niamatpur) என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது கானின் கிராமம் அல்ல. கலோ மஜ்ரா (Kalo Majra) மற்றும் நியாமத்பூர் (Niamatpur) ஆகியவை பாட்டியாலாவில் அருகருகே அமைந்துள்ள கிராமங்கள் என்று கூறப்படுகிறது,

  எக்ஸ்பிரஸின் இந்த அறிக்கையில், பொறுப்புள்ள துறை இதுபோன்ற SMS-களை பலருக்கும் அனுப்புகிறது, அவை அந்த மக்களை பீதி அடைய செய்யவா அல்லது நாங்கள் இத்தனை டெஸ்டுகளை செய்துள்ளோம் என்று பதிவு செய்யவா என்று தெரியவில்லை என்றது. கடந்த மாதங்களில் தனியார் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளன.

  கேரளாவில் (Kerala) உள்ள ஒரு தனியார் ஆய்வகம் அண்மையில் ஏராளமான மக்களை, பெரும்பாலும் மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு, 'போலி' கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழ்களை ('fake' COVID-19 negative) வழங்கியது. அதன் மூலம், அவர்களின் மாதிரிகளை டெஸ்ட் செய்யாமல் மோசடி செய்ததாக செய்தி வெளியானது.

  அதனால் அதன் மேலாளர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார், என்று போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, மீரட் (Meerut) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவமனை பணியாளர் ஒருவர் பணத்திற்காக போலியான கொரோனா வைரஸ் அறிக்கையை வழங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: