என்னுடைய பதிவை ஏன் ட்விட்டர் நீக்கியது? - ரஜினி விளக்கம்

என்னுடைய பதிவை ஏன் ட்விட்டர் நீக்கியது? - ரஜினி விளக்கம்
ரஜினிகாந்த்
  • Share this:
தன்னுடைய பதிவை ட்விட்டர் இந்தியா நிர்வாகம் ஏன் நீக்கியது என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்திருப்பதாவது, “நேற்று பதிவு செய்த காணொளியில் 12 -14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்குச் செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால், அது, “இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்” என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம்.


இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.ட்விட்டர் நிறுவனமும் ரஜினியின் ட்வீட்டை மேற்கோள் காட்டி பதில் அளித்துள்ளது.மேலும் படிக்க: கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன் - வீடியோ!

First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்