• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண வரம்பை நிர்ணயிக்காதது ஏன்? தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி

தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண வரம்பை நிர்ணயிக்காதது ஏன்? தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண வரம்பை நிர்ணயிக்க தயங்குவதன் மர்மம் என்ன என்று தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ”கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 66 சதவிகிதம் பேர் சென்னைவாசிகள். மரணமடைபவர்களில் நான்கில் ஒருவர் சென்னைவாசி. நோயைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்பதையே இந்த அபாயகரமான புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

    சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அரசு மருத்துவமனைகள் நிரம்பிவழிவதாக செய்திகள் வருகின்றன. சுமார் ஏழாயிரம் பேர் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், இனியும் வரப்போகிற நோயாளிகளுக்கு அரசு என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது?

    ஜூன், ஜூலை மாதங்களில் நோயின் தாக்கம் உச்சத்தை தொடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், சென்னையிலுள்ள திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநகராட்சி, படுக்கை வசதியை ஏற்படுத்தி, சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளை இதுவரை செய்யவில்லையே ஏன்?

    பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 25 ஆயிரம் முதல் ஒருலட்சம் வரை கட்டணம் வசூலித்து ஒரு பகல்கொள்ளையே நடத்துகின்றன. அதைத்தடுக்க வேண்டிய அரசு பேரிடர்கால சட்டத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண வரம்பை நிர்ணயிக்க தயங்குவதன் மர்மம் என்ன?

    இப்படி எத்தனையோ கேள்விகள் எழுந்தாலும் எவற்றுக்கும் பதில் சொல்லும் மனநிலை தமிழக அரசுக்கு இல்லை என்பது வெட்கக்கேடானாது. இந்த மனநிலையை மாற்றிக்கொண்டு, நோய்த்தொற்று அதிகரித்துவருவதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை இனிமேலாவது அரசு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: