இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏன் நிலவுகிறது?

இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு திரவ மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன்கள் தேவை என்பது 8,500 மெட்ரிக் டன் ஆகவுள்ளது. உற்பத்தி என்பது நாளொன்றுக்கு 9,000 திரவு மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன்கள் என்ற அளவில் உள்ளது

இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு திரவ மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன்கள் தேவை என்பது 8,500 மெட்ரிக் டன் ஆகவுள்ளது. உற்பத்தி என்பது நாளொன்றுக்கு 9,000 திரவு மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன்கள் என்ற அளவில் உள்ளது

 • Share this:
  இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு திரவ மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன்கள் தேவை என்பது 8,500 மெட்ரிக் டன் ஆகவுள்ளது. உற்பத்தி என்பது நாளொன்றுக்கு 9,000 திரவு மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன்கள் என்ற அளவில் உள்ளது.

  கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின்  நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுவதால், காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை ஈர்த்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைகிறது. இதனால் அவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் செலுத்துவது அவசியமாகிறது.

  இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு திரவ மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன்கள் தேவை என்பது 8,500 மெட்ரிக் டன் ஆகவுள்ளது. உற்பத்தி என்பது நாளொன்றுக்கு 9,000 திரவு மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன்கள் என்ற அளவில் உள்ளது அகில இந்திய தொழில்துறை வாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி தெரியவருகிறது. தேவையை விட உற்பத்தி அதிகமாக உள்ளபோதிலும் ஏன் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது?

  இதற்கு முக்கிய காரணம், திரவ ஆக்சிஜனை எடுத்து செல்ல பயன்படும் கிரையோஜெனிக் டேங்கர் எனப்படும்  டேங்கர் வாகனங்களின் பற்றாக்குறை ஆகும்.

  கிரையோஜெனிக் கொள்கலன்கள் என்றால் என்ன?

  மைனஸ் 90 டிகிரி செல்சியசுக்கு கீழ் கொதிநிலை கொண்ட திரவங்கள் கிரையோஜெனிக் திரவங்கள் எனப்படுகின்றன.

  கிரையோஜெனிக் திரவ கொள்கலன்கள் மைனஸ் 90 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான கிரையோஜெனிக் வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட வாயுக்களை பாதுகாப்பாகவும் குறைந்த செலவில் எடுத்து செல்லவும் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.  மற்றும் பொருளாதார போக்குவரத்து மற்றும் சேமிப்பிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கலன்கள் மிகவும் பாதுகாக்கப்பட்டவை இதில் திரவ வாயுக்கள் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்கப்படுகின்றன.

  ஏன் டேங்கர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன?

  கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முன்னர் இந்தியாவில் கிரையோஜெனிக் டேங்கர்கள் இருந்தன.  கொரோனா தொற்று விஸ்வரூம் எடுக்கத் தொடங்கியதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  நைட்ரஜன் மற்றும் ஆர்கன்  கொள்கலன்களையும் ஆக்சிஜன் எடுத்து செல்ல பயன்படும் கொள்கலன்களாக மாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியது.

  இதையடுத்து, தற்போது இந்தியா வசம் உள்ள கிரையோஜெனிக் டேங்கர்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளது. மேற்கொண்டு 300 டேங்கர்கள் தற்போதைய தேவையாக உள்ளது. இதில், 40 டேங்கர்களை இந்தியா இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.  ஒரு டேங்கரின் விலை போக்குவரத்து செலவு நீங்கலாக  35 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

  கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு இந்தியாவில்  நாளொன்றுக்கு மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்சிஜன்கள் தேவை என்பது 850 மெட்ரிக் டன்னாக இருந்தது.  கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த தேவை 3,100 மெட்ரிக் டன்னாகவும், தற்போது 8,500 மெட்ரிக் டன்னாகவும் அதிகளவு உயர்ந்துள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்சிஜன் தேவை கிடுகிடு என உயர்ந்ததால் அதனை எடுத்து செல்ல பயன்படும் கிரையோஜெனிக் டேங்கர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  தற்போது ரயில்வே துறை எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக ஆக்சிஜன் எடுத்து செல்ல ஆகும் நேரம் 72 மணி நேரத்தில் இருந்து 30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

  இந்திய ரயில்வே இதுவரை 34 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 137 டேங்கர்களில் 2,067 மெட்ரிக் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் 174 மெட்ரிக் டன் மகாராஷ்டிராவிற்கும், 641 மெட்ரிக் டன் உத்தரபிரதேசத்திற்கும், 190 மெட்ரிக் மத்திய பிரதேசத்திற்கும், 229 மெட் டன் ஹரியானாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: