ஏன் சோப்பினால் கை கழுவ வேண்டும்? சோப்பு எப்படி வைரஸை அழிக்கிறது...?

நாம் உபயோகப்படுத்தும் எந்த ஒரு சோப்பும் வைரசுக்கு எதிரானது தான்

ஏன் சோப்பினால் கை கழுவ வேண்டும்? சோப்பு எப்படி வைரஸை அழிக்கிறது...?
நாம் உபயோகப்படுத்தும் எந்த ஒரு சோப்பும் வைரசுக்கு எதிரானது தான்
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஒவ்வொருவரும் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் முக்கியத்துவம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

நாம் உபயோகப்படுத்தும் எந்த ஒரு சோப்பும் வைரசுக்கு எதிரானது தான். கொரோனா வைரசின் வெளிப்புறம் புரதம் மற்றும் கொழுப்பால் ஆனது.

இதனால் கைகளில் மிக எளிதாக பிடித்துக்கொள்ளும். வெறும் நீரால் சுத்தப்படுத்துவது என்பது புரதம் மற்றும் கொழுப்பை ஒன்றும் செய்யாது, நீரில் எண்ணெய் ஊற்றினால், அது தண்ணீருடன் கலக்காது மாறாக மிதக்கும், ஆனால் அதனுடன் சோப்பை சேர்த்தால். நீருடன் கலக்கும்.


சோப்பில் இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. ஒன்று நீருடனும் மற்றொன்று எண்ணெயுடனும் கலக்கும். இதன் மூலம் தண்ணீரில் இருக்கும் கொழுப்பை சோப் இழுக்கும். புரோட்டின் மற்றும் கொழுப்பால் சூழப்பட்ட கொரோனா வைரஸ், மீது சோப்பு படும்போது அவை இரண்டும் தனியாக பிரிந்து வைரஸ் உடைப்படும்.

ஆனால் இது நடைபெற குறைந்தது 20 வினாடிகள் பிடிக்கும். 5 விநாடிகளோ, பத்து விநாடிகளோ மட்டும் கைகளை கழுவும் போது வைரஸ் அங்கேயே தங்கி விடும்.

கிருமி நாசினியும் இது போலவே செயல்படும். அதில் உள்ள ஆல்கஹால், வைரசின் புரதம் மற்றும் கொழுப்பை உடைக்கும், ஆனால் கிருமி நாசினியில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் அல்கஹால் இருக்க வேண்டும்.சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுவது தான் சிறந்தது என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் கூறுகிறது.

நமது கைகள் வேர்த்திருந்தாலோ. அசுத்தமாக இருந்தால் கிருமி நாசினியின் புரதத்தையும் கொழுப்பையும் கரைக்காது என அந்த மையம் கூறுகிறது. எனவே சோப்பை பயன்படுத்தி 20 நொடிகளுக்கு மேல் கைகளை கழுவி கொரோனா வைரஸ் பரவலை தடுப்போம்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்