கொரானோ தாக்கம்... அதிகரிக்கும் முதலீடு... தங்கத்தின் விலை உச்சத்தை தொட காரணம் என்ன..?

கொரானோ தாக்கம்... அதிகரிக்கும் முதலீடு... தங்கத்தின் விலை உச்சத்தை தொட காரணம் என்ன..?
கோப்பு படம்
  • Share this:
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 32,408 ரூபாயாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் செய்யப்படும் முதலீடு குறைந்து, அது தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 73 ரூபாய் அதிகரித்து, 4051 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரனுக்கு ஒரே நாளில் 584 ரூபாய் அதிகரித்து 32408 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனிடையே, வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 90 காசு அதிகரித்து, ₹52.50க்கும், ஒரு கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து, 52500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Also Read : ₹ 2000 நோட்டுகள் இனி ஏடிஎம்களில் கிடைக்காது - இந்தியன் வங்கி அதிரடி

தொடர்ந்து விலை அதிகரித்து வருவதால், திருமண தேவைகளுக்கு தங்கம் வாங்க வேண்டிய நிலையில் உள்ள பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3048 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை, தற்போது 4051 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 1003 ரூபாய் உயர்ந்துள்ளது. அத்துடன், ஒரு சவரன் 24384 ரூபாயில் இருந்து 32 408 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.மேலும், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 189 ரூபாய் அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 512 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு தங்க நகைகள் வாங்க காத்திருக்கும் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்