• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் கொரோனா தொற்று மரணங்கள் - காரணங்கள் என்னென்ன? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழகத்தில் கொரோனா தொற்று மரணங்கள் - காரணங்கள் என்னென்ன? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நோய் தொற்றை தாமதமாக கண்டறிவதும், சில தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தவர்கள் இடையே இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக அரசு கூறி வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 0.7 சதவீதம் மட்டுமே இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த இறப்புகளில் 50 சதவீதம், மருத்துவமனைகளில் கடைசி நேரத்தில் அனுமதிப்பதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

    வியாழக்கிழமை நிலவரப்படி உயிரிழந்த 145 பேரில் 28 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இறந்தவர்கள். இதேபோல் 48 மணி நேரத்தில் 27 பேரும், 3 நாட்களில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    4 நாட்களில் 16 பேர், 5 நாட்களில் 10 பேர் என குறுகிய நாட்களிலேயே அதிகம் பேர் மரமணமடைந்துள்ளனர். 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்கள் முறையே 7, 9 நாட்களில் 4 பேர் மரணித்துள்ளனர். 9 நாட்களில் இருவரும், 10 நாட்களில் மூவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்ததாக 11 முதல் 21 நாட்கள் வரை தினமும் ஒன்று அல்லது இரண்டு என உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    பரிசோதனையை அதிகரிக்காதது, தாமதமாக தொற்றை கண்டறிவது உள்ளிட்ட காரணங்களாலும் இந்த நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தற்போது அறிகுறியே இல்லாமல் பலருக்கு தொற்று பரவுவதால், இயற்கையாக ஏற்படும் மரணங்கள் மீது சந்தேகம் எழுகிறது. ஏனெனில் பலருக்கு இறந்த பிறகே கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. இதனால் மரணிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே நோய் பரவலின் தீவிரத்தை அறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.

    Also see...

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? மருத்துவக் குழுவினரோடு இன்று ஆலோசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: