அத்தியாவசிய பயணம்: யாரிடம் அனுமதி பெறுவது?

அத்தியாவசிய பயணம்

அத்தியாவசிய பயணம்

மாவட்டத்திற்குள்ளேயே பயணம் செய்ய அவசியம் ஏற்பட்டால், வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல யாரிடம் அனுமதி பெறலாம் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

  அதன்படி, இறப்பு, திருமணம், உடல்நலக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளால் வெளியே செல்வோர், உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.

  சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோர் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெறுவது அவசியம்.

  சென்னையிலேயே ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கு செல்வோர், மண்டல அதிகாரியிடம் அனுமதி பெறுதல் வேண்டும். மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

  இதில் மாவட்டத்திற்குள்ளேயே பயணம் செய்ய அவசியம் ஏற்பட்டால், வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 300 பேர் இதுபோன்ற அனுமதி கடிதம் பெற்று அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியூர் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிறப்பு, இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு செல்ல அனுமதி கடிதம் பெற வரவேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Also see...

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: