கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா மறைத்ததாக அமெரிக்கா புகார் - சீனா விரைகிறது WHO குழு

கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா மறைத்ததாக அமெரிக்கா புகார் - சீனா விரைகிறது WHO குழு
சீனா விரைகிறது WHO குழு
  • Share this:
கொரோனா பரவிய விதம் குறித்து விசாரணை நடத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் குழு அடுத்த வாரம் சீனாவுக்கு செல்கிறது. இதன்மூலம் சீனாவின் மீதான சர்வதேச சமூகத்தின் பிடி இறுகுவதாக கருதப்படுகிறது.

உலகில் கொரோனாவால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,29,000 தாண்டியுள்ளது. கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்கவும், எச்சரிக்கவும் சீனா தவறி விட்டதாகவும் உலக நாடுகள் சாடின.

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகார் தெரிவித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து முழுமையாக ஆய்வுசெய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளரான சவுமியா சுவாமிநாதன், இதற்கான குழு அடுத்த வாரம் சீனா செல்வதாகவும் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று வவ்வால்களிடம் காணப்படும் வைரஸ்களை ஒத்திருப்பதாகவும், வவ்வால்களிடம் பல்வேறு வகையிலான கொரோனா தொற்றுகள் இருப்பது தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


சுமார் 500-க்கும் மேற்பட்ட வகையான கொரோனா வைரஸ் உள்ளதாகவும் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பன்னாட்டு வல்லுநர்களை உள்ளடக்கிய இந்த குழு, கொரோனா தொற்று உருவானது எப்படி என்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு எங்கு எப்போது பரவத் தொடங்கியது என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது.

இதனிடையே, கொரோனா குறித்த தகவலை தனது இணையபக்கத்தில் புதுப்பித்துள்ள உலக சுகாதார நிறுவனம், ஊஹானில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல அலுவலகம் தான் முதல்முறையாக அதாவது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, அறியப்படாத காரணம் மூலம் நிமோனியா பரவுவதாக தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறித்து அதுவரை சீனா எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading