• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து எதுவும் தெரியாது - உலக சுகாதார நிறுவனம்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து எதுவும் தெரியாது - உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார மையம் (கோப்புப்படம்)

உலக சுகாதார மையம் (கோப்புப்படம்)

ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து எதுவும் தெரியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில் தாங்கள் தடுப்பூசியை கண்டறிந்து விட்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். இந்நிலையில் ரஷ்ய தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், ரஷ்ய தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும், அதுதொடர்பான விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்தது.

    Also read: தென் கொரியாவில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்

    மேலும் இதுதொடர்பாக அந்நாட்டுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தியை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாகவும், ஆகஸ்ட் இறுதியில் விற்பனைக்கு தயாராகி விடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: