கொரோனா தொற்று குறித்த அணுகுமுறையில், தன் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய சுயாதீனக்குழுவை அறிவித்தது WHO

கொரோனா விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, தன் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய சுயாதீனக் குழுவை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.

கொரோனா தொற்று குறித்த அணுகுமுறையில், தன் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய சுயாதீனக்குழுவை அறிவித்தது WHO
டெட்ரோஸ் - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
  • Share this:
கொரோனா விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, தன் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய சுயாதீனக் குழுவை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு சார்பு நிலையில் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்திருந்தார். அதன்பிறகு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது.

அதற்கு பதிலளித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலான டெட்ரோஸ், உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்பட்டதாகவும், கொரோனாவை எதிர்த்து தடுப்பு நடைமுறைகளுடன் செயலாற்ற உலக நாடுகள் அனைத்துக்கும் போதுமான அவகாசம் இருந்ததாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், தனது செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் சுயாதீனக் குழுவையும், அதன் தலைவர்களையும் அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் க்ளார்க் என்பவரையும், லைபீரியாவின் முன்னாள் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃப் ஆகியோர் தலைவர்களாக அறிவிக்கப்படுவதாக, டெட்ரோஸ் அமைப்பு உறுப்பினர் சந்திப்பில் அறிவித்தார். இந்த சுயாதீனக் குழு, நவம்பரின் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading