HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»who investigators are finally allowed to land in china in a bid to uncover the origins of the coronavirus pandemic vai
கொரோனா தோன்றல் குறித்து உலகசுகாதார அமைப்பு விசாரணை... சீனா சென்ற 10 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு
கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு உகான் நகரில் முகாமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்பதை விசாரிக்க சீனா சென்ற, உலக சுகாதார அமைப்பின் விசாரணைக் குழு 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என, உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் 10 பேர் கொண்ட குழு, கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்பது குறித்து விசாரணை செய்ய சீனா சென்றுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணையை தொடங்க உள்ளனர்.
கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் யூஹான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கு விலங்குகள், பறவைகள், உயிருடன் விற்கும் சந்தையில் இருந்து உருவாகி, மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று உலகம் முழுவதும் பரவலாக கருதப்படுகிறது. ஆனால், இதை சீனா மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.