Remdesivir : கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது உலக சுகாதார நிறுவனம்

தமிழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச்செல்லும் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.

தமிழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச்செல்லும் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மருந்துகளில் ரெம்டெசிவிர் முக்கிய இடம் வகித்தது.

    இரண்டாம் அலை பரவலில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்தால் பெரிதாக எந்த பயனும் இல்லை அதற்கு பதிலாக ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி வந்த போதிலும் ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை அதிகரித்து வந்தது.

    தமிழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச்சென்றனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு தற்போது கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தினை நிக்கியுள்ளது.

    இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை சற்று குறைந்து, 3,874 ஆக பதிவாகி உள்ளது. பெங்களூருவில் ஒரே மாதத்தில் உயிரிழப்புகள் இருமடங்காக அதிகரித்துள்ளன.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 70 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,57,72,400 ஆக அதிகரித்துள்ளது.

    ஒரே நாளில் 3,874 பேர் நோய் தொற்றால் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2,87,122 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில், 57.64 சதவீதம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனினும், ஒரே நாளில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 77 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததால், மீண்டோர் விகிதம் 86.74 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் பகாடியா மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவை பொறுத்தவரை முதல் ஐந்தாயிரம் மரணங்கள் 5 மாதங்களில் நிகழ்ந்த நிலையில், கடந்த ஒரே மாதத்தில் ஐந்தாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை, 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட 95 பேரும், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட 236 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

    40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 527 பேரும், 50ல் இருந்து 59 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்து 61 பேரும் ஒரே மாதத்தில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்து 79 பேர் ஒரு மாதத்தில் இறந்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. கர்நாடகா மாநிலம் கல்புர்கியிலும், போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போபாலில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் போபால் நகரம் வெறிச்சோடி காட்சியளிக்கிறது. இதற்கிடையே கர்நாடகா மாநிலம் மங்களூருவில் சூப்பர் மார்க்கெட்டுக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற மருத்துவருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Must Read : நல்ல காற்றோட்டம் கொரோனா பரவலை குறைக்கும் - மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் தகவல்

     

    தமிழகத்தில் ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 397 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: